'பணம் புழல்
வரைக்கும் பாயும்’. ஆமாம், தமிழகச்
சிறைகளில் பணம் பேசும், சாதிக்கும்,
சலுகை வாங்கும், விளையாடும்.
சில மாதங்களுக்கு
முன்பு 'உள்ளே போன’
ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர்,
'என்னால் 555 சிகரெட் குடிக்காமல் இருக்க முடியாது’ என்றார். 'ஓ... யெஸ்’ என்று வாங்கி வந்தார்கள். அதனுடைய ஒரிஜினல்
விலை, ஒரு காட்டன் 1,050 ரூபாய். உள்ளே 10 டபுள் பாக்கெட்டுகள் இருக்கும். அதற்கு அவர்
கொடுத்த விலை 25 ஆயிரம். சிறைக்
கம்பிகளுக்குப் பின்னால் ஐ.பி.எஸ். அதிகாரி... பிளேடு பக்கிரி என்றெல்லாம்
வித்தியாசம் கிடையாது. நீங்கள் கேட்பது எல்லாம் கிடைக்கும்... பெண்ணைத் தவிர.
ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட்!
சிறைக்குள் ஒரு
பீடியின் விலை 10 ரூபாய். ஒரு
பீடிக் கட்டின் விலை 100 ரூபாய். 'பரம ஏழை’க் கைதிகளுக்காக ஒரு இழுப்புக்கு இரண்டு
ரூபாய்... ரெண்டு இழுப்புக்கு ஐந்து ரூபாய் போன்ற மலிவு விலைத் திட்டங்களும்
உண்டு. என்ன காரணமோ தெரியவில்லை, பெரும்பாலான
சிறைகளில் காலம்தொட்டு கோல்டு ஃபில்டர் சிகரெட் மட்டும்தான் விற்கிறார்கள். ஒரு
சிகரெட்டின் விலை 50 ரூபாய்.
தலா 10 கிராம், 20 கிராம் தொடங்கி 50 கிராம் வரை கஞ்சா உருண்டைப்
பொட்டலங்கள் கிடைக்கும். தேவை என்று சொல்லிவிட்டால், சிறையின் அறைக் கதவுப் பூட்டின் பின்புறமாக
ஒட்டிவைத்துவிடுவார்கள். இல்லை என்றால், கக்கூஸுக்குள் பார்சல் பண்ணுவார்கள். 10 கிராம் 200 ரூபாய். 50 கிராம் 1,000 ரூபாய்.
கைதிகள்
உறவினர்களிடம் பேசுவதற்காக சிறைக்குள் லேண்ட் லைன் தொலைபேசி வைக்கலாம் என்று உச்ச
நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது. சில மாதங்களுக்கு முன், கோவை சிறையில் ரெய்டு நடத்தி மூட்டை, மூட்டையாக செல்போன்களை அள்ளிய பிறகே, சிறைக்குள் தொலைபேசி வைக்கப்படும் என்று
அறிவித்தார் சிறைத் துறை ஐ.ஜி. சிறையில் சொந்தமாக செல்போன் வைத்து இருக்க ஒரு நாள்
கட்டணம் 100 ரூபாய். கைதி
மொபைலில் பேசினாலும் சரி... பேசாவிட்டாலும் சரி... இதைக் கட்ட வேண்டும். இந்தக்
கட்டணம் சிங்கிள் சிம் கார்டுக்கு மட்டும்தான். டூயல் மொபைல்களில் கூடுதல் சிம்
கார்டுகளைப் பயன்படுத்த, ஒவ்வொரு சிம்
கார்டுக்கும் கட்டணம் ரூ.50. வார்டன்கள்
நடத்தும் மொபைல் போன் பூத்களிலும் பேசலாம். மதுரை சிறையில் பி.எஸ்.என்.எல்.
தொடங்கி ஏர்டெல், ஏர்செல், ஐடியா மொபைல் வரைக்கும் வைத்து இருக்கிறார்கள்.
கட்டணம் கம்பெனியின் டாரிஃபை விட ஐந்து மடங்கு அதிகம்.
சிறையின்
அறைக்குள் தாராளமாக டி.வி.டி. ப்ளேயர் போட்டு சினிமாவும் பார்க்கலாம். ஆனால்,
சொந்த டி.வி.டி. கூடாது
என்பது எல்லா சிறைகளிலும் எழுதப்படாத ஆணையாம். இன்றைய நிலவரப்படி ஒவ்வொரு மத்திய
சிறையிலும் 20 முதல் 50 டி.வி.டி.
ப்ளேயர்கள் இருக்கின்றன. ஒரு நாள் வாடகை 500 ரூபாய். டி.வி.டி. ப்ளேயரை விட டி.வி.டி-களின்
விலைதான் அதிகம். பழைய படத்துக்கு 250 முதல் 500 வரை ஓர் இரவு
(அண்ணாவின் 'ஓர் இரவு’ படம் அல்ல!)
வாடகை. புதுப் படங்களுக்கு 1,000 ரூபாய். கில்மா படங்களுக்கு வாடகை 3,000 ரூபாய். சிறைக்குள் கில்மா வகையறா
டி.வி.டி-களுக்குத்தான் டிமாண்டு!
சிறைக்குள் பெண் கிடைக்காது என்றுதான் சொன்னேன். ஆனால், வாட்டசாட்டமான பெண் சாயல்கொண்ட ஆண் கிடைப்பார்.
ரேட் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதேபோல் இரண்டு
ஹோமோ கைதிகள் நெருங்கிப் பழகினால்கூட, அது இலவசம்
கிடையாது. காவல் காக்கும் வார்டனுக்கு 5,000 கட்டணம் அழ
வேண்டும்.
ஜெயில் வாழ்க்கை
கஷ்டமோ... இல்லையோ, ரொம்ப காஸ்ட்லி!
நன்றி -
டி.எல்.சஞ்சீவிகுமார் (டைம்பாஸ்)
பேசாமல் அவர்களை பத்து லட்சம் ரூபாயை வாங்கி கொண்டு அரசாங்கமே வெளியில் விட்டு விடலாம் .திருந்துவதற்கு தானோவென்று சந்தேகம் வந்து விட்டது.
ReplyDelete